ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்ல முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் முனையத்தில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசிக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கருமப்பீடத்தில் கடவுச்சீட்டு […]













