உலகம்

தென்னாப்பிரிக்காவில் 12 பேர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரியவருகிறது.

வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த  10இற்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதலை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சுரங்கத் தொழிலுடன் தொடர்புடைய பிரச்சினைகளே மேற்படி தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்