உலகம் செய்தி

வடகொரியாவின் மற்றுமொரு அத்துமீறல்: பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு

ரஷ்யா மற்றும் சீனாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வடகொரியப் பணியாளர்களின் வலையமைப்பு மூலம், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்திற்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 450 மில்லியன் டாலர் முதல் 800 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

ரஷ்யா மற்றும் சீனாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வடகொரியப் பணியாளர்களின் வலையமைப்பு மூலம், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்திற்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 450 மில்லியன் டாலர் முதல் 800 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

ஐ.நா. சபையின் தடைகளை வடகொரியா மீறுவதற்கு இது உதவுவதாகவும் மேற்படி நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடகொரியாவின் கட்டாயத் தொழிலாளர் திட்டத்தை மனித உரிமைகள் அமைப்புகள் நீண்டகாலமாகக் கண்டித்து வருகின்றன.

வடகொரிய ஆட்சிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுப்பாடு, துஷ்பிரயோகம் மற்றும் கட்டாயப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வடகொரியாவின் தடைகள் மீறலைக் கண்காணித்து வந்த ஐ.நா. நிபுணர் குழுவைக் கலைக்க ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதை அடுத்து, 2024-இல் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பு ‘பல்வேறு நாடுகளின் பொருளாதாரத் தடை கண்காணிப்புக் குழுவை’ (MSMT) உருவாக்கியது.

ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைக் கொண்ட இக்கூட்டமைப்பு இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உலகளாவிய வலையமைப்பின் மூலம் வடகொரியா மற்றும் பிற நாடுகள் ஐ.நா-வின் தடைகளைத் திட்டமிட்டு மீறி வருகின்றன” என்று அந்த அறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா 35,000 முதல் 1,01,000 தொழிலாளர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

குறைந்தது 17 நாடுகள் வடகொரியத் தொழிலாளர்களைக் கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டாலும், பெரும்பான்மையானவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவிலேயே பணியாற்றி வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி