மொரோக்கோவில் முதல் முறையாக பெண் ஒருவர் பிரதமராக நியமனம்
மொரோக்கோவில் முதல் முறையாக பெண் ஒருவர் பிரமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது, நகர்ப்புறத் திட்டமிடல் துறை அமைச்சரான ஃபாத்திமா ஜஹ்ரா மன்சூரியை Fatima Zahra Mansouri நேற்று பிரதமராக நியமித்துள்ளார்.
மராகேஷ் நகர மேயராகவும் பதவி வகித்து வந்த மன்சூரியை புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பணித்துள்ளதாக அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
இத்தேர்தலில் மன்சூரியின் மையவாதக் கட்சியான ‘அத்தென்டிசிட்டி அண்ட் மாடர்னிட்டி பார்ட்டி’ (PAM) அதிக வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




