செய்தி தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் வடக்கு பகுதி திமுக சார்பில்  ஜமீன் பல்லாவரம் ஹீபா பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. .

மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சி 2 வது மணடல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை கலந்து கொண்டு மருத்து முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

மருத்துவ முகாமில் இரத்ததானம், கண் பரிசோதனை, எழும்பு சிகிச்சை பிரிவு, இ.சி.ஜி, இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு குறித்து தனித்தனியாக அரைகள் அமைத்து அனைத்து வித பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன.

மருத்துவ முகாமில் தனியார் மருத்துவமனையான போர்ட்டீஸ், அகர்வால், சுகம், குமார் ஆர்த்தோ, குமரன் பல் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமில் வரும் நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கபட்டு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்லாவரம், பம்மல், பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தும், கர்பினி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தை வழங்கினார்

மணடல குழுத் தலைசர் ஜோசப் அண்ணாதுரை. இதில் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக நிர்வாகிகள் உட்பட அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content