இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுகிறது மொட்டு கட்சி

நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் உள்ள நிலையில், இலங்கைக்குள் நெல்சன் மண்டேலா ஒருவரை உருவாக்கும் வேலையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்துவருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் உள்ள நிலையில், இலங்கைக்குள் நெல்சன் மண்டேலா ஒருவரை உருவாக்கும் வேலையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்துவருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேவைக்கேற்ப நாட்டில் சட்டம் அமுலாகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்நாட்டிலுள்ள நீதித்துறைமீது எமக்கு நம்பிக்கை உள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாக செயல்படுகின்றனர்.

வெளிநாட்டிலுள்ள ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்சவுக்கு பிணையின்றி சிறையில் உள்ளார்.

நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து, தமது பயணத்தை தொடரலாம் என ஜனாதிபதி எண்ணுவாரானால் அது பிழையான – தவறான மதிப்பீடாகவே இருக்கும். அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்குள் நெல்சன் மண்டேலாவை
உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். அதாவது அநுரவின் இலக்கு தவறியுள்ளது என்பது உறுதி.”-என்றார் சாகர காரியவசம்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை