செய்தி தமிழ்நாடு

தி.மு.கவின் ஊழல் பட்டியில் விரைவில் வெளியிடப்படும் – அண்ணாமலை

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியிடப்படும் என பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும் எனக் கூறினார்.

அத்துடன்  ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு 2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்த அவர்,  இந்த சொத்து பட்டியல் முழுவதையும் இணையத்தளத்தில் வெளியிடுவோம் எனவும் கூறினார்.

எனது 10 ஆண்டு வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்தும் அதில் வரப் போகிறது. அதை பார்த்ததற்கு அப்புறம் 420 யார் என்று தெரியும். அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம் எனக் கூறினார்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி