இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்: தேரர் நம்பிக்கை

“இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அமுலில் இருக்க வேண்டும். வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவது தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வலிக்கின்றது.”- என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புவதாக ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் அமேலும் கூறியதாவது:

“சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அத்தண்டனையை ரத்து செய்துள்ளது.

அதேபோன்று, தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும். அந்த மன்னிப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்” என்று தேரர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை