ஜோர்டான் மீது ஏவுகணைத் தாக்குதல் – இரு அமெரிக்க வீரர்கள் பலி
ஜோர்டான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் அந்த இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டதை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தற்போது உறுதி செய்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல்களில் நான்கு அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





