தென் அமெரிக்கா

சிலியில் நபர் ஒருவருக்கு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு!

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்,பறவைகளுக்கு மட்டுமமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது.

நோய்த்தொற்றின் காரணத்தை கண்டறியவும், நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை அடையாளம் காணவும் சிலி நாட்டு அரசாங்கம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது . கடந்த வாரத்தில் சிலி நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கோழி ஏற்றுமதியையும் அந்த நாடு நிறுத்தி வைத்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஈகுவடார் நாட்டை சேர்ந்த 9வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. மனிதனில் இருந்து மனிதனுக்கு பறவைக்காய்ச்சல் பரவும் வாய்ப்பு குறைவு என்றாலும் மனிதனுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content