இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இந்தியாவிலிருந்து இன்றும் 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள் நாட்டிற்கு

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 சரக்கு விமானம் இன்று (14.12) பிற்பகல் 3 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

நாட்டில் சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்காக 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

பேரிடர் நிவாரணப் பொருட்களை விமானத்திலிருந்து தரையிறக்கிய பின்னர், நாட்டின் மஹியங்கனை பகுதியில் கள வைத்தியசாலையை அமைத்து சேவைகளை முன்னெடுத்த
85 பணியாளர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ உபகரணங்களின் இருப்புடன் அவர்கள் புறப்பட்டனர்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இந்திய வைத்தியசாலை பணியாளர்களை அனுப்பி வைத்தார்.

இந்த இந்திய வைத்திய்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் உட்பட 7,000 நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த விமானம் மாலை 5.15 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஆக்ராவுக்குப் புறப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை