அனோஜனின் வழக்கு தொடர்பில் சிறப்பு கவனம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜனின் வழக்கு தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும், சம்பந்தப்பட்ட சம்பவத்தின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராசா தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள, அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




