இலங்கை செய்தி

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திருப்பம் – மீண்டும் இணையும் பிரபலங்கள்

மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தாலும்கூட அதையெல்லாம் மறந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசுடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களே இந்த ஒப்பரேஷனில் இறங்கியுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் மைத்திரியைச் சந்தித்து இந்த விவகாரம் பற்றி விரிவாகப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் விளைவாக ரணிலும் மைத்திரியும் நாடாளுமன்றில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை அந்த எம்.பிக்களே செய்தனர் என்று அறியக் கிடைத்துள்ளது.

அந்தச் சந்திப்பின்போது அரசில் இணைவதற்கான தனது விருப்பத்தை மைத்திரி தெரிவித்தார் என்று மைத்திரியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்துதான் இப்போதெல்லாம் மைத்திரி மீண்டும் சர்வகட்சி அரசு பற்றி பேசத் தொடங்கியுள்ளார். ரணிலின் அரசுடன் இணைவதற்கு சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்.

See also  நைஜீரியா மிருகக்காட்சிசாலை காவலாளியை கடித்து கொன்ற சிங்கம்

அரசுடன் இணைந்துள்ள சு.க. உறுப்பினர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுத்ததும் அவர்தான்.

அண்மையில் வெளிநாடு சென்றிருந்த தயாசிறி, சில தினங்களுக்கு முன்னர்தான் நாடு திரும்பியிருந்தார். அந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தித்தான் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

விரைவில் அரசுடன் மைத்திரி இணையும் செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content