இலங்கை

கொழும்பில் உள்ள சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் வீதியொன்று தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, கொழும்பிற்கு செல்லும் வாகனங்கள் அவிசாவளை வீதியின் கொடிகாவத்தை சந்தியில் இடது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் கொலன்னாவை ஊடாக தெமடகொடை நோக்கி பயணிக்க முடியும்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வௌியேறும் வாகனங்கள் தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை சந்தியில் வலது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் இடது பக்கமாக திரும்பி கொடிகாவத்தை நகரில் வலது பக்கமாக திரும்பி அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும்.மேலும் தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் இடது பக்கமாக திரும்பி மீதொடுமுல்லை வீதி ஊடாக மீண்டும் அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content