செய்தி வட அமெரிக்கா

கலிபோர்னியா பாலைவனத்தில் 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் தடம் புரண்டது

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் பாலைவனத்தில் இரும்புத் தாது ஏற்றிச் சென்ற 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று திங்கள்கிழமை தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இன்ஜின் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான எரிபொருள் கசிவு இருப்பதாகவும், எனினும் பொது அல்லது சுற்றுச்சூழலுக்கு இது அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் அண்மையில் தொடருந்தும் இவ்வாறான விபத்துக்கள் பதிவாகிவருவதாகவும்,  இந்த மாத தொடக்கத்தில், அரிசோனாவில் கார்ன் சிரப் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதும் இவ்வாறான ஒரு கோர சம்பவம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் இந்த விபத்தில் அதிகளவான பொருட்செதம் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி