இலங்கை

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம் பெற்றுள்ளது.

வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த லொறி மோதிவிட்டு சென்றதாகவும் லொறியின் டயருக்குள் இரு கால்களும் சிக்குண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கந்தளாய் -லீலாரத்ன மாவத்தையில் ரியாஸ் முஹம்மட் ரிஸ்கான் (23) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை இன்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய போது இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து சேவை பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்