ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ!

ஆஸ்திரேலியா, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் காட்டுத் தீயும் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 30 வருடங்களாக அத்துறையில் சேவையாற்றிய 59 வயதான தீயணைப்பு வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

நியூகேஸில் இருந்து சுமார் 90 கிமீ வடக்கே நெரோங் அருகே தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்தே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.

நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே தீயணைப்பு வீரர் ஒருவர், சேவையின்போது உயிரிழந்துள்ளார்.

சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டேயர்வரை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

Saranya

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித