இலங்கை செய்தி

புலிகள் அமைப்பை ஊக்குவிக்க இடமளியோம்! NPP அரசு திட்டவட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepala தெரிவித்தார்.

கிளிநொச்சி இளைஞர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற் பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை நாடாளுமன்றத்திலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்.
எனினும், உயிரிழந்த உறவுகளை நினைகூர முடியும்.

புலிகள் அமைப்பின் பாடலை பாடிய , கிளிநொச்சி இளைஞர் ஒருவர் பாடிய அல்லது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த விவகாரம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று (நேற்று) சட்டமா அதிபருடன், பொலிஸ்மா அதிபர் கலந்துரையாட உள்ளார். அதன்பின்னர் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை