வன்முறை வேண்டாம்: பிஷப் David McClay அழைப்பு
கிழக்கு Belfast நகரில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களை அயர்லாந்து திருச்சபையின் பிஷப் David McClay வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்காது என்றும், இவை மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இளைஞர் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு, அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
வன்முறையற்ற மற்றும் அமைதியான சூழல் மீண்டும் வீதிகளில் திரும்ப வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் இத்தகைய வன்முறைகளை ஒருமனதாக புறக்கணிக்க வேண்டும் என்று பிஷப் David McClay அழைப்பு விடுத்துள்ளார்.




