எச்சரிக்கை : புதிய உச்சம் தொட்ட வெப்ப உயர்வு!
மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதலின் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளதாக சமீபத்திய ‘உலகளாவிய காலநிலை மாற்றத்தின் குறிகாட்டிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 நாடுகளில் உள்ள 56 நிறுவனங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் பகுப்பாய்வின்படி வெளியிடப்பட்டுள்ள இவ் அறிக்கையில், 2025-ஆம் ஆண்டில் மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதல் 1.37°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கணிப்புகள் பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5°C வெப்பமயமாதல் வரம்பை அபாயகரமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அளவிலேயே உமிழ்வுகள் தொடர்ந்தால், 2030-ஆம் ஆண்டளவில் 1.5°C வரம்பு கடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“முக்கியமாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




