பொழுதுபோக்கு

மகாராஜாவாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி… புதிய டுவிஸ்ட் இதோ

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வரும் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட பிரபலம் நிதிலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் மகராஜா என படக்குழு அறிவித்துள்ளது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை மிரட்டி வரும் விஜய் சேதுபதி, தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தியில் அவர் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. அதில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்த விஜய் சேதுபதி, தற்போது தமிழில் ஹீரோவாக கம்பேக் கொடுக்கவுள்ளார்.

மாமன்னன், மாவீரன் வரிசையில் இப்போது மகாராஜாவாக விஜய் சேதுபதி களமிறங்கவுள்ளார். அதேபோல், இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

செஸ் விளையாட்டில் வரும் கிங் மேலே ஒரு கழுகு பறந்து வந்து உட்காருவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, அனுராக் ஆகியோரின் உருவமும் தெரிகிறது.

போஸ்டரிலேயே செம்ம லீட் கொடுத்து மிரட்டியுள்ளார் இயக்குநர் நிதிலன். அவரது முதல் படமான குரங்கு பொம்மை ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல், மகாராஜாவும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான கமர்சியல் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்தாண்டு இறுதிக்குள் மகாராஜா திரைப்படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்