தங்கம் மீது திரும்பும் உலக நாடுகளின் கவனம் – 18 டன் தங்கத்தை கொள்வனவு செய்த போலந்து!!
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 41 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சந்தை விலையில் இதன் மதிப்பு சுமார் 5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் தங்கத்தை அதிகம் வாங்கிக் குவிக்கும் நாடுகளின் வரிசையில் போலந்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
அந்நாட்டு மேலதிகமாக 18 டன் தங்கத்தை கொள்வனவு செய்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டின் மொத்த தங்க இருப்ப 614 டன்னாக அதிகரித்துள்ளது.
இது ‘சுதந்திர தேவி’ (Statue of Liberty) சிலையின் எடையை விட அதிகமாகும். ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் இவ்வளவு தங்கம் இருந்தபோதிலும், போலந்தின் 700 டன் கொள்வனவு என்ற இலக்கை அடைய இன்னும் தங்கத்தை சேர்க்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தை தொடர்ந்து சீனா கடந்த மாத்தில் 10 டன் தங்கத்தை கொள்வனவு செய்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்த தங்க இருப்பு 2,331 டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதன் மதிப்பு 290 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.
உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் முறையே 9 மற்றும் 7 டன் தங்கத்தைத் தங்கள் வசம் சேர்த்துள்ளன.




