வட அமெரிக்கா

வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: பேராசிரியர் பலி!

Law enforcement and first responders gather on South Street near the Bell Tower on the University of North Carolina at Chapel Hill campus in Chapel Hill, N.C., Monday, Aug. 28, 2023, after a report of an “armed and dangerous person” on campus. (Kaitlin McKeown/The News & Observer via AP)

அமெரிக்காவில் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பேராசிரியர் பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் CCTV காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர் மற்றும் ஆசிரியரின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்