Site icon Tamil News

கனடாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்

கனடாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு இந்திய பிரஜைகள் இந்த விமானத்தில் விமானி பயிற்சிக்காக பயணித்ததாகவும், அவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

Exit mobile version