ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு
அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப், ஸ்பெயின் மீதான தனது அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளார்.
அட்லாண்டிக் கூட்டணியில் ஸ்பெயினை ஒரு “மோசமான” கூட்டாளி என்று வர்ணித்த ட்ரம்ப், ஸ்பெயினுடனான “அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு” கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
“ஸ்பெயின் ஒரு பயனற்ற முயற்சி. நாங்கள் இனி ஸ்பெயினுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
நேட்டோவிற்கான பாதுகாப்பு செலவீனத்தை 05 சதவீதமாக உயர்த்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி வருகிறது.
இந்த செலவீனத்தை உயர்த்த ஸ்பெய்ன் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்போதிருந்தே இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்பெயின் 32 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டணியில் 07 ஆவது இடத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு செலவீனத்திற்காக ஏற்கனவே 02 சதவீதத்தை உயர்த்தியுள்ளதாகவும் வாதிடுகிறது.




