இலங்கை

சிறைச்சாலை வன்முறை : மற்றுமொரு காவலர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

அதன்படி, மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதல்களின் காரணமாக,  காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று காலை (08) வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன.

இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்