இலங்கை

சிறைச்சாலைக்கே பாதுகாப்பு இல்லை – மக்களின் நிலமை என்ன? : சஜித் கேள்வி

சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் 220 லட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த போகிறது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (7.7) இடம்பெற்ற  சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன புத்தகமான வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற புத்தகத்தில் சிறைச்சாலைகள் தொடர்பாகவும் சிறைக்கைதிகளை எவ்வாறு வழிநடத்துவது என்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளJ. அதன் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா?

வெலிக்கடை , மஹர போன்ற சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து அமைச்சர் பாடம் கற்றுக்கொள்ள தவறியுள்ளனர்.

சிறைச்சாலையில் பாரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அங்குள்ள நிலைமை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்வகையில், புலனாய்வு தகவல்கள் அவருக்கு கிடைப்பதில்லையா?” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்