இலங்கை

அனைத்து குற்றச்செயல்களிலும் எதிர்கட்சியே பிரதான குற்றவாளி – அனுர சாடல்

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தையும் ஒடுக்க வேண்டும் என்றும், அதற்காக சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்திலும் எதிர்க்கட்சியே பிரதான குற்றவாளியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி திசாநாயக்க இந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், குற்றவியல் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் முதல் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் வரை அனைவரும் எதிர்க்கட்சியின் எதிரிகளாகிவிட்டனர்  எனத் தெரிவித்தார்.

இராணுவத்திலோ அல்லது உளவுத்துறைகளிலோ உள்ள சிறு குழுக்கள், அரசின் பொருட்டும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அதிகாரத்திற்காகவும், ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்திற்காகவும் சில காரியங்களைச் சாதித்திருந்தால், நமது அரசாங்கம் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கத் தயங்காது என்றும் கூறினார்.

அதேநேரம் ஒரு சிறிய குழுக்கள் அரசியல் நோக்கத்துடன் கொலைகளை செய்ததாக சுட்டிக்காட்டிய அவர், கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவது நமது உறுதியான கடமையாகும் எனவும் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்