இலங்கை

யாழில் சிறுமி ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் மீதும் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரைணைகளை மேற்கொள்ள சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (17.07) இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை  கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலையில் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில் அங்கு கூடி இருந்த பொதுமக்கள்,  கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்