வட அமெரிக்கா

மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் – எலோன் மஸ்க் கவலை

மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மக்கள் தொகையானது 2100ஆம் ஆண்டளவில் 110 கோடிக்கும் கீழ் குறையும் என்றும், சீனாவின் மக்கள் தொகை 73 கோடி அளவில் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரம் ஒன்றைப் பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும், சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.

அண்மையில் வெளியான ஐ.நா சபை, உலக வங்கி மற்றும் இந்திய சுகாதாரத்துறை ஆகியவற்றின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்