இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கம்
டெலிகிராம் செய்தியிடல் செயலியை இந்திய அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
மருத்துவ நுழைவுத் பரீட்சையில் (நீட்) பங்கேற்கும் விண்ணப்பதாரர்களை ஏமாற்றுவதற்காக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததை அடுத்து மத்திய அரசாங்கம் இன்று அந்த செயலியை முடக்கியுள்ளது.
இதன்படி வரும் ஜுன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த செயலி தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் இடம்பெறவிருந்த பரீட்சை இரத்து செய்யப்பட்டது.
இதனால் குறைந்தது 2.3 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





