அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு!

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் ITAK கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் M.A. Sumanthiran வலியுறுத்தியுள்ளார். இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த முனைப்புடன் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது நீண்டகாலக் கோரிக்கையாகும். இதனை […]

அரசியல் இலங்கை செய்தி

3 லட்சம் பேரை பணயக் கைதியாக வைத்திருந்தார் பிரபாகரன்: மஹிந்த அணி குற்றச்சாட்டு!

  • February 27, 2026
  • 0 Comments

“பிரபாகரன் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை படையினர் காப்பாற்றினார்கள்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “இலங்கையில் போர் குற்றம், இனப்படுகொலை நடந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு நடக்கவில்லை. பிரபாகரன்தான் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் […]

இலங்கை செய்தி

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்!

  • February 27, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், […]

அரசியல் இலங்கை செய்தி

பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு முதுகெலும்பில்லை: மஹிந்த அணி கொக்கரிப்பு!

  • February 26, 2026
  • 0 Comments

“ உரையாடலில் பங்கேற்று நாமல் ராஜபக்கவிடம் கேள்வி எழுப்புவதற்குரிய முதுகெலும்பு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் வீரசேகர முன்வைத்தார். “ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் என்பவற்றிடமிருந்து நாமல் ராஜபக்சவுக்கு […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நியமனம்!

  • February 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி Senior Professor Thirunavukkarasu Velnambi ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 25 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் கிழக்கு, புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, தற்போது யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றி வருகின்றார். கல்வித்துறையிலும் […]

அரசியல் இலங்கை செய்தி

நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

  • February 26, 2026
  • 0 Comments

நௌபர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாவார் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது  அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது தொடர்பில் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டார். மேற்படி கைது நடவடிக்கையானது நாட்டு மக்களை திசை […]

இலங்கை செய்தி

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!

  • February 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் உட்பட்ட குழுவினர் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் இன்று (26) வழிபாட்டில் ஈடுபட்டனர். பொலன்னறுவையில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர வரவேற்றார். அங்கிருந்து வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுவாமி அழைத்து வரப்பட்டார். ஆலயத்தில் நிர்வாக […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி: மண்கவ்வியது மே.தீவுகள்!

  • February 26, 2026
  • 0 Comments

மேற்கிந்திய West Indies தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 83 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், ஹோல்டர் – சைபர்ட் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை ஈடுபட்டனர். இதனால் அணியில் […]

செய்தி

வவுனியா மாவட்ட கூட்டத்தில் தனிச்சிங்களம்: ரவிகரன் எம்.பி. கடும் சீற்றம்!

  • February 26, 2026
  • 0 Comments

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் […]

இந்தியா

மணமகள்மீது துப்பாக்கிச்சூடு: சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்!

  • February 26, 2026
  • 0 Comments

மணமேடையில் மணமகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள பயங்கர சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஹாரின் , பக்சார் மாவட்டத்தில் சவுசா நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி குமாரி. 18 வயதான இவருக்கும், உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனும், மணமகளும் மேடையில் இருக்கும்போது, மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த நபரொருவர், திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். காயம் […]

error: Content is protected !!