குழந்தைகள் கண் முன்னே பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!
பாகிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்பே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், நள்ளிரவு வேளையில் அவதியுற்றுள்ளார்.
இதன்போது அபித் அலி (Abid Ali) மற்றும் ஷத்கத் அலி (Shadqat Ali) ஆகியோர் அவரையும், அவரது குழந்தைகளையும் அருகில் உள்ள வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவருக்கும் பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இருப்பினும் குற்றவாளிகள் இருவரும் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக் கோரி மேன்முறையீடு செய்திருந்தனர்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களின் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.




