ரயில் ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு – பர்னம் உறுதி
லண்டன்-மென்செஸ்டர் London-Manchester வழித்தடத்தில் இயங்கும் ரயில் ஓட்டுநர்கள் ஊதிய உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் ஊதியத்தை உயர்த்த பிரதமர் பர்னம் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய ரயில் ஓட்டுநர்கள் பணவீக்கத்திற்கு மேலான 3.6 சதவீத உயர்வை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வாரத்தின் ஐந்தாவது வேலை நாளில் பணிக்கு வந்தால் £720 வரை ஊக்கத்தொகை பெறவும் உறுதி செய்துள்ளது.



