உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ தாக்குதல் திட்டத்தை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவருகின்றது. மறுபுறத்தில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துவருகின்றது. இந்நிலையில் அமைதி பேச்சு முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

அத்துமீறுகிறது இஸ்ரேல்: துருக்கி கடும் கண்டனம்!

  • May 18, 2026
  • 0 Comments

காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை துருக்கி வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை கடற்கொள்ளைச் செயல் சுட்டிக்காட்டியுள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சு, கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதில் பங்கேற்ற நிலையில், இத்தகைய அடக்குமுறைகளால் பாலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஆதரவைத் தடுக்க முடியாது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகளை தீவிரப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்து!

  • May 18, 2026
  • 0 Comments

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களை முடக்கி, அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் Scott Bessent தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளை தமது நாடுமீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. போர் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் ஊடாக ஈரானின் புதிய திட்டம் முன்வைப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு புதிய முன்மொழிவை பாகிஸ்தான் ஊடாக சமர்ப்பித்துள்ளது என தெரியவருகின்றது. ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு புதிய முன்மொழிவை பாகிஸ்தான் வழியாக சமர்ப்பித்துள்ளது. புதிய திட்டம் பதினான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதையும் அமைதியை நிலைநாட்டுவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தனது ஈரானியப் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு தொடர்கிறது: ஈரான் தகவல்!

  • May 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி (Esmaeil Baghaei ) இன்று (18) தெரிவித்துள்ளார். ஈரானின் Mehr News Agency மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. “ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் யுரேனியப் பொருட்கள் குறித்து அவர்கள் (அமெரிக்கா) சில ஊகங்களை எழுப்பினர். ஆனால், அதில் எந்த அடிப்படையும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். அமெரிக்க தரப்பில் சில முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல் நாங்களும் எங்களது […]

இலங்கை செய்தி

சர்வதேசத்திடம் நீதி கோரி முள்ளிவாய்க்கால் திடலில் பிரகடனம் வெளியீடு!

  • May 18, 2026
  • 0 Comments

தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பா ல் ஈழத் தமிழினத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய சவால்களை உள்ளடக்கிய ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2026’ உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 1. பூகோள அரசியலும் தமிழினமும் அமெரிக்கா உள்ளிட்ட ஏக துருவ நாடுகளுக்கும், சீனா, ரஷ்யா போன்ற பல்துருவ நாடுகளுக்கும் இடையிலான வல்லாதிக்கப் போட்டியில், பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. மாறிவரும் உலக ஒழுங்கிற்கு […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • May 18, 2026
  • 0 Comments

தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்கள் ஒன்றுகூடித் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமாகின. முற்பகல் 10:29 மணியளவில் நினைவொலி எழுப்பட்டது. முற்பகல் 10:30 மணியளவில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் தனது குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைப் பலிகொடுத்த […]

இலங்கை செய்தி

சர்வதேச தேயிலை தினம்: “Ceylon Tea”க்கு புத்துயிர் கொடுக்கிறது இலங்கை!

  • May 18, 2026
  • 0 Comments

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மே 21 ஆம் திகதி இலங்கையில் தேயிலை நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல Ceylon Tea நாமத்தை மேலோங்க வைக்கும் வகையில் காலி முகத்திடலில் அன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி […]

உலகம் செய்தி

இறையாண்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம்: தைவான் ஜனாதிபதி திட்டவட்டம்!

  • May 18, 2026
  • 0 Comments

தைவான் தனது இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி Lai Ching-te திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சீனா தைவானை, தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதுகின்றது. தேவைப்பட்டால் இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாடு தைவானின் தற்காப்பிற்கு ஆதரவளித்தாலும், சீனாவைப் பகைத்துக்கொள்ளாமல் நடுநிலைமையை நிலைநிறுத்தவே முயற்சிக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போதும் தைவான் விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தைவான் ஜனாதிபதி மேற்கண்டவாறு […]

இலங்கை செய்தி

நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

  • May 18, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் நாளை 19 ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கூடும் என்று நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப […]