இலங்கை செய்தி

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு சிறை! யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு

  • May 13, 2026
  • 0 Comments

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் 1 கிராம் 440 மில்லிகிராம் (1.44 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற […]

இலங்கை செய்தி

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

  • May 13, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில், உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி […]

இலங்கை செய்தி

பொலிஸாரை கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞன்: யாழில் சம்பவம்!

  • May 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, பொலிஸாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது கையில் வைத்திருந்த ஹெரோயின் பொட்டலத்தை வாய்க்குள் போட்டுத் […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடி முக்கிய 5 நாடுகளுக்கு விஜயம்!

  • May 13, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மே 15 முதல் 20 வரை இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. முதலாவதாக மே 15 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டு ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். அதனை தொடர்ந்து, நெதர்லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நோர்வோ (மே 18-19) மற்றும் இத்தாலி (மே […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

  • May 13, 2026
  • 0 Comments

ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்புப் பணி (அரசியல்) அதிகாரியாக நியமிப்பது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இந்நியமனத்துக்கு […]

உலகம் கல்வி

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா பக்கம் சாய்கிறது தென்கொரியா!

  • May 13, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தென்கொரியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தென்கொரிய கப்பலொன்று அண்மையில் ஹார்முஸ் நீரிணை பகுதியில் அங்குத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரத்தில் படிப்படியாகப் பங்களிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் மற்றும் ராணுவ வீரர்களை அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில் தென்கொரியா ஈடுபட வாய்ப்புள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இப்பகுதியைப் பாதுகாக்க அமெரிக்கா தனது […]

உலகம் செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

  • May 13, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு சீனா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் வாங் யி கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல்களைக் குறைத்து, பிராந்திய அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை சீன வெளிவிவகார […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை!

  • May 13, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய கடுமையான தாக்கங்கள் தொடர்பில் வரவு- செலவுத் திட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பாதுகாப்புக்காக பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 200 அமெரிக்க டாலர்களை எட்டினால் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. தற்போதைய பதற்றமான சூழலால் எரிபொருள் விநியோகம் தடைபட்டு, அதன் விளைவாக ஆஸ்திரேலியக் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு உயரும் அபாயத்தை திறைசேரி தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. […]

இலங்கை செய்தி

வடக்கு நிலைவரம் குறித்து ஆஸ்திரேலிய தூதுவருக்கு விளக்கம்!

  • May 13, 2026
  • 0 Comments

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பு இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் கடற்றொழில் துறைகளின் மேம்பாடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால […]

உலகம் செய்தி

முடிவுக்கு வருமா அமெரிக்க, சீன வர்த்தகப் போர்?

  • May 13, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இன்று (13) பீஜிங் நோக்கி பயணமானார். என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang உள்ளிட்ட முக்கியத் தொழிலதிபர்கள் டிரம்புடன் இணைந்து பயணித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்களைத் தணிக்கவும், விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய ஒப்பந்தங்களை எட்டும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. ஈரானுடனான போர் மற்றும் உள்நாட்டுப் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் டிரம்ப் அரசியல் […]