இலங்கை செய்தி

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு சிறை! யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் 1 கிராம் 440 மில்லிகிராம் (1.44 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இ டமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து பின்வரும் தண்டனைகளை அறிவித்தார்:

குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

விதிக்கப்பட்ட தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும்பட்சத்தில், மேலதிகமாக 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் வழக்குத் தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி முன்னிலையாகி வாதாடியிருந்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை