கடமை துப்பாக்கி மாயம் – போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்
யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த அதிகாரி நேற்று (27) சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் […]



