பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி
இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட […]







