இலங்கை செய்தி

விமல் வீரவன்சவுக்குப் பிணை

  • May 25, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று (25) முன்னிலையானார். வாக்குமூலம் வழங்கயதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விமல் […]

இலங்கை

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

இலங்கை

​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

  • April 24, 2026
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் […]