T20 உலகக்கிண்ண தொடர்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!
“இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ண தொடரானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் கைகொடுத்துள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்றது.
இதன்போது T20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ T20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள போட்டிகளில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கையில் 20 போட்டிகள் நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள அனைத்து அணிகளுக்கும் நன்றிகள்.
அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.
குறித்த தொடர் சுற்றுலாத்துறைக்கும் கைகொடுக்கும். விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுகள் இணைந்து ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்துள்ளன.” எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.





