இலங்கை செய்தி

புஸ்ஸா சிறைச்சாலையில் திடீர் சோதனை!!! கைத்தொலைபேசிகள் மீட்பு

புஸ்ஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இரண்டு கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

ஏ மற்றும் பி வார்டுகளில் கைத்தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இரண்டு வார்டுகளிலும், கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்படும் இரண்டாம் தர குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சக்திவாய்ந்த குற்றவாளிகளின் சீடர்கள் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை