SriLankan ஏர்லைன்ஸ் சென்னை அலுவலகத்தில் நிதி மோசடி!
SriLankan Airlines நிறுவனத்தின் சென்னை கிளையில் பணியாற்றிய சில இந்திய ஊழியர்கள் சுமார் 2.2 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த இந்த பணியாளர்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் கையொப்பங்களை போலியாக மாற்றி நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக SriLankan Airlines நிறுவனம் இந்திய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இழந்த பணத்தை மீட்பதற்கான விசாரணைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.





