இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரை குறி வைத்து துப்பாக்கி சூடு

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை குறி வைத்து நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உறுப்பினருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஓட்டிச் சென்ற காரில் துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளது.

நேற்றிரவு 10.35 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் காரில் இருந்து இறங்கி வீட்டின் கேட்டை திறக்கும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 09 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்