உலகம் ஐரோப்பா செய்தி

போரில் பங்கேற்கமாட்டோம்: ஸ்பெயின் மீண்டும் திட்டவட்டம்!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் ஸ்பெயின் ஒருபோதும் பங்கேற்காது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Jose Manuel மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பதற்றமான சூழலுக்கு ராணுவ ரீதியான தீர்வு ஏதுமில்லை என்றும், போரைத் தவிர்த்து சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் செயல்படுவதே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வன்முறையைத் தூண்டும் செயல்கள் உலகளாவிய குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால், இந்த மோதலில் இருந்து ஸ்பெயின் விலகி இருக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது தூதரக உறவுகளைத் துண்டித்துள்ள ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தில் போர்ச் சூழலை கடுமையாக விமர்சிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

சர்வதேச விவகாரங்களில் அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புவதாக ஸ்பெயின் அரசு இடித்துரைத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி