ஐரோப்பா

உக்ரைன் முழுவதும் தொடர் தாக்குதல்கள் – 17 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் முழுவதும் நடந்த தொடர் ரஷ்யத் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவை உலகளாவிய அச்சுறுத்தல் என ஜனாதிபதி  வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.

இரவு முழுவதும் நடந்த இந்தத் தாக்குதல்களால் கீவில் நான்கு பேரும், ஒடெசாவில் ஏழு பேரும், டினிப்ரோவில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.

மேற்படி  உயிரிழப்புகளை கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் நெதர்லாந்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  ஜெலென்ஸ்கி, புட்டினின் “விரிவாக்க லட்சியங்களையும்” நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அவரது விருப்பத்தையும் சுட்டிக்காட்டி, அவரை நாஜிக்களுடன் ஒப்பிட்டுள்ளார்.

மேலும், சிரியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பிராந்தியங்களில் ரஷ்யாவின் இராணுவ ஈடுபாடு இந்த அச்சுறுத்தலின் உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!