தமிழ்நாடு

விஜயலட்சுமிக்கு உணவில் கருக்கலைப்பு மாத்திரை கலந்து கொடுத்த சீமான்- வீரலட்சுமி குற்றச்சாட்டு

நடிகை விஜயலட்சுமியின் உணவில் கருக்கலைப்பு மாத்திரைகளை கலந்து கொடுத்து கருச்சிதைவு அடைய செய்தார் சீமானை என வீரலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்று நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பான வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக, சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவரது வழக்கறிகறிஞர் விளக்கமளித்தார்.

இதனையடுத்து, நடிகை விஜயலட்சமி தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்நிலையில், பாதுகாப்பு தர வேண்டும் என்று தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி பொலிஸ் கமிஷனருக்கு மனு அளித்தார்.

ஹாஹாஹாஹா.. பல்லாவரத்தில் 3வது இடம் பிடித்து மண்ணைக் கவ்வும் வீரலட்சுமி! |  Veeralakshmi faces big defeat in Pallavaram - Tamil Oneindia

அப்போது வீரலட்சுமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு ஏற்படுவதற்கு சீமானே காரணம். நடிகை விஜயலட்சுமிக்கு தெரியாமல் அவரது உணவில் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருச்சிதைவு அடைய செய்தது சீமான்.

அவருக்கு எங்கெல்லாம் சொத்து உள்ளது என்பது குறித்த தகவலை திரட்டி வருகிறோம். விரைவில் இது குறித்த புகாரையும் அளிப்போம்” என்றார்.மேலும் பேசிய அவர், “நான் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர்.

வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் தலையிட்ட பிறகு இந்த வழக்கு திசை மாறுவதால் அவர் இந்த வழக்கில் தலையிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content