உலகம் செய்தி

உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை அமெரிக்கா அபகரிக்க முயல்கிறது -ரஷ்யா குற்றச்சாட்டு

உலகளாவிய எரிசக்தித் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான கொள்கைகள், உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை “அபகரிக்க” முயல்கின்றன என அவர் விமர்சித்துள்ளார்.

லுகோயில் மற்றும் ரோஸ்நெஃப்ட் போன்ற ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களை சர்வதேச சந்தைகளிலிருந்து வெளியேற்றுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

அவர் RT இந்தியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா வெளியிட்ட சில கொள்கை ஆவணங்களில் உலக எரிசக்தி சந்தையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வேண்டும் என வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து பாதைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவே அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, உலக எரிசக்தியின் முக்கிய பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

இது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி