மணிப்பூரில் புதிய முதல்வர் விரைவில் பதவியேற்பு!
மணிப்பூர் Manipur மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.கவின் BJP யுத்நம் கேம்சந்த் சிங் udhnam Khemchand Singh பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீடிடிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் இரு சமூகத்தினரிடையே இனக்கலவரம் வெடித்தது. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பெப்ரவரி மாதம் பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டு, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மணிப்பூர் பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் யும்நம் கேம்சந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மணிப்பூர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
துணை முதல்வராக குகி சமூகத்தை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சரான நெம்சா கிப்கென் nemsa Kipken பொறுப்பேற்பார் என தெரியவருகின்றது.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரமானது சர்வதேச சமூகத்தில் இந்தியாவுக்கு பெரும் கருப்பு புள்ளியாக மாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





