உலகம் செய்தி

55 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து!

ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் 55 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் இறக்கைகளில் ஒன்று உடைந்து தண்ணீரில் மிதக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விமானம் உயரத்தை அடைய முடியாமல் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி